உலகின் தண்ணீர் இல்லாத முதல் நகரமாக மாற உள்ள ஆசிய நாட்டின் தலைநகர்

10 ஆடி 2025 வியாழன் 11:16 | பார்வைகள் : 1092
தண்ணீர் பிரச்சினை உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்து வருகிறது.
இந்நிலையில், உலகின் தண்ணீர் இல்லாத முதல் நகரமாக காபூல் மாறும் என அறிக்கை வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் 60 லட்சமாக மக்கள் வசித்து வருகின்றனர்.
அதிகப்படியான நிலத்தடி நீர் பயன்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2030 ஆம் ஆண்டில், உலகில் தண்ணீர் இல்லாத முதல் நகராக காபூல் மாற உள்ளதாக மெர்சி கார்ப்ஸ்(Mercy Corps) என்ற நிறுவனத்தின் அறிக்கை எச்சரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் காபூலின் நிலத்தடி நீர் மட்டம் 98 அடி வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 44 மில்லியன் கன மீட்டர் (1,553 கன அடி) அளவுக்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கா படையெடுப்பின் போது, கிராமங்களை இருந்த மக்களை நிர்வகிக்க வசதியாக நகரங்களை விரட்டினர். இதன் காரணமாக காபூலின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்தது. இது காபூலின் தண்ணீர் தேவையை அதிகரித்தது.
மேலும், காபூலின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் நிலத்தடி ஆழ்துளை கிணறுகளில் கிட்டத்தட்ட பாதி ஏற்கனவே வறண்டுவிட்டதாக யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் அங்கு மழைப்பொழிவும் கடுமையாகக் குறைந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தண்ணீர் இல்லாத நகராக மாறி, பாரிய அளவிலான மக்கள் காபூலில் இருந்து இடம்பெயரும் நிலை ஏற்படும் என Mercy Corps எச்சரித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1