மகளுக்கு கட்சியில் பதவியா? போகப் போக தெரியும் என ராமதாஸ் சூசகம்

10 ஆடி 2025 வியாழன் 12:39 | பார்வைகள் : 146
மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பதவியா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' தற்சமயம் இல்லை. போகப் போகத்தான் தெரியும்'' என பாட்டு பாடி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சூசகமாக பதில் அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது ஆக., 10ல் நடைபெறும் பா.ம.க., மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சொல்லலாம்'' என ராமதாஸ் பதில் அளித்தார்.
பின்னர், கட்சி செயற்குழுவில் மகள் காந்திமதி பங்கேற்றது பேசும் பொருளாகி உள்ளது. கட்சியில் முக்கிய பதவியா? என்ற கேள்விக்கு, ''தற்சமயம் இல்லை. போகப் போகத்தான் தெரியும்'' என பாட்டு பாடி ராமதாஸ் சூசகமாக பதில் அளித்தார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றார்.