T12 போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!!!

10 ஆடி 2025 வியாழன் 14:11 | பார்வைகள் : 549
நாசவேலைகள் மற்றும் கேபிள்கள் திருட்டு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக, Massyஐ 40 நிமிடங்களில் Évry- Courcouronnesஉடன் இணைக்கும் T12 டிராம் பாதையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
புதன்கிழமை தொடங்கிய தடைகள், வியாழன்கிழமையும் தொடர்ந்துள்ளன. Grigny பகுதியிலிருந்து Évry-Courcouronnes வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த தடைகள் காரணமாக தினசரி பயணிகள், குறிப்பாக வேலைக்குச் செல்லும் மக்கள், சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். பயணிகள் சலிப்பும் கோபமும் அடைந்துள்ளனர்.