Paristamil Navigation Paristamil advert login

ஈபிள் கோபுரத்திலிருந்து இரண்டு பேர் பரசூட்டில் குதித்தனர்: மூன்று பேர் காவலில்!!!

ஈபிள் கோபுரத்திலிருந்து இரண்டு பேர் பரசூட்டில்  குதித்தனர்: மூன்று பேர் காவலில்!!!

10 ஆடி 2025 வியாழன் 15:14 | பார்வைகள் : 1289


பரிஸ் ஈபிள் கோபுரத்தின் மேல் ஏறி, வியாழக்கிழமை (ஜூலை 10) காலை இரண்டு பேர் பரசூட்டில் குதித்தனர். அவர்கள் தற்போது காவலில் உள்ளனர். மூன்றாவது நபர் விசாரணைக்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்காக பரிஸ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சட்டவிரோத நுழைவு,  பாதுகாப்புச் சட்டங்களை மீறுதல் மற்றும்  பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய செயல்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்