Paristamil Navigation Paristamil advert login

சுரைக்காய் சட்னி!

சுரைக்காய் சட்னி!

10 ஆடி 2025 வியாழன் 17:30 | பார்வைகள் : 118


பொதுமக்கள் அதிக அளவில் காலையிலும் மாலையிலும் விரும்பி சாப்பிடும் டிபன்களை இட்லி தோசை பெருமளவு பங்கு வைக்கிறது. அந்தவகையில் இட்லி, தோசைக்கு எப்போதும் சாம்பார், சட்னி செய்து போரடித்துவிட்டதா? அந்த வகையில் டேஸ்ட்டாகவும் , ஆரோக்கியமாகவும்,வித்தியாசமாகவும், வீட்டில் உள்ளவர்களை அசத்தும் வகையிலும் ஒரு ஸ்பெஷல் டிஷ் செய்து கொடுக்கலாம்.அப்படி என்ன சுவையான டிஷ் என்றால் சுரைக்காய் சட்னி.

நீர் காய்கறிகளை வைத்து குழம்பு பொரியல் செய்யாமல் இது போன்று சட்னி செய்து கொடுத்தால் அனைவருமே சாப்பிட்டுவிடுவார்கள். அதுவும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சட்னி மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தேவையான பொருட்கள் : சுரைக்காய் - 1 தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் உப்புஇஞ்சி - 2 துண்டுபூண்டு - 6,7 பல் கொத்தமல்லிகருவேப்பிலை சீரகம் - அரை ஸ்பூன்பச்சை மிளகாய் - 4 தயிர் - 1 டம்ளர்வரமிளகாய் - 1

செய்முறை : சுரைக்காய்யை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முற்றிய விதைகள் இருந்தால் மட்டும் அதை நீக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய சுரைக்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம்,கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இட்லி தோசைக்கு வழக்கமான சட்னியா?? - இப்போ இதை ட்ரை பண்ணுங்க
நன்றாக வதக்கியதை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதில் எடுத்து வைத்திருந்த தயிர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்ட வேண்டும். அவ்வளவுதாங்க சுவையான ஆரோக்கியமான "சுரைக்காய் சட்னி" தயார். இதனை அப்படியே இட்லி மேல ஊற்றி சாப்பிட்டால் சுவை சூப்பரா இருக்கும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்