“ யாதும் அறியான் ” திரைப்படத்தின் முன்னோட் த்தால் பரபரப்பு ...!

10 ஆடி 2025 வியாழன் 17:30 | பார்வைகள் : 177
“ செந்தூரா ” திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கோபி, தற்போது “ யாதும் அறியான் ” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார்.
மேலும், அப்பு குட்டி, தம்பி ராமையா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.பிரேக்கிங் பொயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படத்தை ஜூலை மாதம் வெளியிடுவதற்கு படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இந்தநிலையில், தற்போது திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.அதில், 2024 ஆம் ஆண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கதை நடப்பது போன்று காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் உள்ள காட்சியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
அந்த காட்சியில், தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது, இளைஞர்கள் , பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டங்கள், முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு என எழுதப்பட்டு, 1.1.2026 எனத் திகதி இடப்பட்ட சுவரொட்டியொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி பணியாற்றிவரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவது போல சுவரொட்டி இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.