பிரான்ஸ்-பிரித்தானியா தயாரிக்கும் சக்திவாய்ந்த ஏவுகணை!!

10 ஆடி 2025 வியாழன் 17:21 | பார்வைகள் : 834
பிரான்ஸ்-பிரித்தானியா இணைந்து ஏவுகணை ஒன்றை தயாரிக்க உள்ளது. அமெரிக்காவின் பங்கர் பஸ்ட்டர் குண்டு போன்று மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக இது இருக்கும் எனவும், ரேடாரின் கண்களுக்குள் சிக்காமல் தாக்குதல் நடத்தக்கூடிய திறன் கொண்டதாகவும் இது வடிவகைக்கப்பட உள்ளது.
Storm Shadow என பெயரிடப்பட்டுள்ள இவ்வகை ஏவுகணைகள் 250 கி.மீ தூரம் பயணிக்கும் எனவும், யுக்ரேனுக்கு வழங்குவதற்காக அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளன.
ஒரு ஏவுகணையின் மதிப்பு 1 மில்லியன் யூரோக்கள் எனவும், ரேடார் கருவிகளில் சிக்காமல் மறைந்துகொள்ளும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்ட உள்ளன.
இதற்கான ஒப்பந்தம் ஒன்றை போடுவதற்கான பேச்சுவார்த்தை இன்று காலை பிரித்தானியாவில் இடம்பெற்றது. பிரித்தானியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மக்ரோன், இன்று காலை கியர் ஸ்டாமருடன் சந்திப்பு மேற்கொண்டு இதனை கலந்தாலோசித்தனர்.