சீனாவின் Shein நிறுவனத்துக்கு €150 மில்லியன் யூரோக்கள் குற்றப்பணம் அறவிட்ட பிரான்ஸ்!!

10 ஆடி 2025 வியாழன் 18:21 | பார்வைகள் : 1133
இணையவழி விற்பனை நிறுவனமான Shein இற்கு, பிரெஞ்சு அரசு €150 மில்லியன் யூரோக்கள் குற்றப்பணம் அறவிட்டுள்ளது.
தனியுரிமை ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, இந்த குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது. தொலைபேசியில் தரவிறக்கப்படும் செயலிகளூடாக cookie பயன்படுத்துவதாகவும், அது பிரான்சின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் பிரான்சில் விதிமுறைகளை மீறி பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டதற்காக €40 மில்லியன் யூரோக்கள் குற்றப்பணம் அறவிட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.