Paristamil Navigation Paristamil advert login

'€40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!' - அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் பிரதமர்!!

'€40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!' - அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் பிரதமர்!!

10 ஆடி 2025 வியாழன் 22:28 | பார்வைகள் : 5256


 

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்களை சேமிக்கும் திட்டத்தினை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ முன்மொழிந்துள்ளார்.  அதில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

"இங்கேயும் அங்கேயும் என சில குறிப்பிட்ட முயற்சிகள் இருக்கலாம், ஆனால் வரிகள் மூலம் நாம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்," என அவர் தெரிவித்தார்.

"சில பிரிவுகள் குறிவைக்கப்பட வேண்டும், மற்றவை இலக்கிடப்படாமல் இருக்க வேண்டும்", ஆனால் "நியாய முயற்சியுடன் அது வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்." எனவும் பிரதமர் தெரிவித்தார்.

தற்போதுள்ள 5.8% எனும் பற்றாக்குறையை 2026 ஆம் ஆண்டில் 4.6% சதவீதமாக குறைக்க இந்த சேமிப்பு அவசியம் எனவும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்