டொரண்டோவில் நடைபெறவுள்ள நிகழ்வு குறித்து எச்சரிக்கை

28 ஆனி 2025 சனி 08:53 | பார்வைகள் : 1149
டொரண்டோவில் நடைபெறவுள்ள பிரைட் பேரணி நிகழ்வில் களவுச் சம்பவங்கள் பதிவாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பிரைட் Pride வாராந்த நிகழ்வின் போது 300க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டதாக டொரண்டோ நகரப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மீண்டும் அதே நிலைமை ஏற்படலாம் எனத் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வார இறுதியில் திருடர்கள் மீண்டும் செயல்பட வாய்ப்பு அதிகம். அதுவே அவர்களின் முறைமை.
அவர்கள் இவ்வாறான கூட்ட நெரிசலில் வாய்ப்புகளைத் தேடுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்களது உடமைகளை உடலுடன் நெருக்கமாக வைத்திருக்கவுமாறும், முன்பக்கம் பையில் வைத்துக்கொள்ளுமாறும், பத்திரமாக கவனத்துடன் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் செயல்படாத அலைபேசிகள் மற்ற கண்டங்களில் சரியாக வேலை செய்யும் எனவும் அந்தக் காரணத்தினாலே திருடர்கள் இவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள் எனவும் டிஜிட்டல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1