Étretat கடற்கரையில் கவனக்குறைவுக்கு 785 யூரோக்கள் குற்றப்பணம்!!
.jpeg)
28 ஆனி 2025 சனி 15:56 | பார்வைகள் : 3274
Étretat பகுதியில் பாறைகள் அருகே கவனக்குறைவாக சிக்கிக்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பட்சத்தில், அபராத தொகையாக 785 யூரோக்கள் வரை வசூலிக்கப்படும்.
இந்த தொகைக்கு, ஹெலிகாப்டர் அல்லது மீட்பு படகுகள் போன்ற சிறப்பு சேவைகளின் கூடுதல் செலவுகளும் சேர்க்கப்படும். தற்போது மூன்று வழக்குகளில் பணம் வசூலிக்கத் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாறைகளின் அடிப்பகுதியில் செல்வதும், சில சுரங்கங்கள் மற்றும் இடங்களில் நடப்பதும் நகராட்சி சட்டப்படி தடை செய்யதுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே 21 மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு 1.3 மில்லியன் பேர் வருகை தரும் இந்த கடற்கரை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஜூன் 15 அன்று ஒரு குழந்தையுடன் 12 பேர் சிக்கி மீட்கப்பட்ட சம்பவம், சுற்றுலாப் பயணிகள் விதிகளை பின்பற்றாமல் நடப்பதை காட்டுகிறது. விதிமுறைகளை மீறினால் அபராதங்களும் விதிக்கப்படும்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1