குடியரசுகள் கட்சி - புரூனோ ரத்தெயோ தேசிய ஆலோசனை சபை!

28 ஆனி 2025 சனி 16:13 | பார்வைகள் : 1269
Les Républicains கட்சி தலைவர் புரூனோ ரத்தெயோ, கட்சியின் தேசிய ஆலோசனை கூட்டத்துக்காக மிசேல் பார்னியே உட்பட தலைமை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடன் பங்கெடுக்கின்றார். இந்த கூட்டம் பாரிஸின் ஐந்தாவது வட்டாரத்தில் உள்ள ' Maison de la mutualité' மண்டபத்தில் நடைபெறுகிறது.
தேசிய ஆலேசனைக் கூட்டம்
குடியரசுகள் கட்சியான Les Républicains தனது தேசிய ஆலோசனை கூட்டத்தை இன்று (சனிக்கிழமை) நடாத்துகிறது. இது ஒரு வகை 'பாராளுமன்றம்' போலவே உள்ளது.
மிசேல் பார்னியே (தேசிய ஆலோசனைத் தலைவர்), புரூனோ ரத்தெயோ, ஜெரார்ட் லார்ஷர் (செனட் தலைவர்), பிரான்சுவா-சவியே பெலாமி (ஐரோப்பார்லி உறுப்பினர்) உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.
புதிய கட்சித் தளவமைப்புகளுக்கான வாக்கெடுப்பு நடைபெறும்.
2026 மாநகராட்சி தேர்தலுக்கான தீர்வுகள் குறித்து பல்வேறு கருத்தரங்கங்கள் நடைபெறும்.
முன்னணி நிலையை மறுபடி பெற கட்சி மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுகிறது.
உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது. (பிப்ரவரி முதல் மே வரை, கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 43,000 லிருந்து 1,20,000 ஆக உயர்ந்துள்ளது)
என புரூனோ ரத்தெயோவின் தலைமையில் லே ரெபுப்ளிக்கன் கட்சிமறுவாழ்வையும், நகராட்சி தேர்தல் வெற்றியையும் நோக்கி தங்களை முறையாக சீரமைத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1