2030ம் ஆண்டுக்குள் இலக்குகளை அடைவதில் பின்னடைவில் உள்ளது பிரான்ஸ்!
28 ஆனி 2025 சனி 17:13 | பார்வைகள் : 1679
பிரான்ஸ், கரியமிலவாயு (CO₂ ) வெளியீடுகளை குறைப்பதில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை என்று காலநிலை உயர் ஆணையம் (Haut Conseil du Climat) எச்சரித்துள்ளது.
2030 இலக்கு என்ன?
1990-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2030-ம் ஆண்டுக்குள்CO₂ வெளியீடுகளை 40% குறைக்க பிரான்ஸ் உறுதி கூறியுள்ளது. ஆனால் இப்போது, இந்த இலக்கை அடைவது மிகவும் கடினமாகியுள்ளது.
2019: வெளியீடு மிகச் சிறிய அளவில், 1.9% மட்டுமே குறைந்தது.
2020: 9% குறைந்தது — ஆனால் இது கொரோனா தடைகள் காரணமான தற்காலிக குறைவு.
இலக்கை அடைய வேண்டுமெனில் தற்போதைய விகிதத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.
2021: குறைந்தபட்சம் 3% குறைப்பு.
2024–2028 (மூன்றாவது கார்பன் திட்டக் காலம்): ஆண்டுக்கு சராசரி 3.3% குறைப்பு தேவை.
அரசின் மற்றும் மாவட்டங்களின் நடவடிக்கைகள், தேசிய குறைப்பு திட்டமான Stratégie nationale bas carbone (SNBC) உடன் பூரணமாக ஒத்துப்போகவில்லை.
ஒரு காலத்திற்கு வழங்கப்பட்ட கார்பன் உச்சவரம்பு மீறப்படும்போது, அடுத்த கால வரம்பும் உயர்த்தப்படுகிறது இதனால் பொறுப்பு பின்னோக்கி தள்ளப்படுகிறது.
பிரான்ஸ் தனது காலநிலை இலக்குகளை அடைய சிறந்த நடைமுறைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan