காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம்- டிரம்ப் அறிவிப்பு
28 ஆனி 2025 சனி 17:14 | பார்வைகள் : 2055
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசாவில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் தெரிவித்தார்.
காசாவில் மக்களுக்கு நிறைய உதவிகள் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், அங்குள்ள மக்கள் மிகக் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள்.
மேலும், உணவுப் பொருட்களைத் திருடும் நபர்களைக் கடுமையாகக் கண்டனம் செய்த அவர், காசாவில் உணவு விநியோகம் திறம்பட நடைபெறுவதாகவும் கூறினார்.
முன்னதாக, காசாவில் உள்ள ஒரு மனிதாபிமான அறக்கட்டளைக்கு $30 மில்லியன் (சுமார் ₹250 கோடி) நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இஸ்ரேலிய அமைச்சர் ரான் டெர்மர் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவரான டெர்மர், இந்தப் பயணத்தின்போது காசாவில் போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதில் 10 பேர் உதவி விநியோக மையத்தில் உணவுக்காகக் காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan