40°C தாண்டுகிறது வெப்பம்... நாளை 73 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

28 ஆனி 2025 சனி 18:52 | பார்வைகள் : 888
நாளை ஜூன் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பலத்த வெப்பம் நிலவும் எனவும், இவ்வருடத்தில் முதன்முறையாக 40°C இற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்சின் சகல மாவட்டங்கள் உட்பட மொத்தமாக 73 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Eure -et-Loir , Mayenne , Sarthe , Loir-et-Cher , Maine-et-Loire , Yonne , Loiret , Indre -et-Loire , Côte-d'Or , Haute-Saône , Territoire de Belfort , Doubs , Nièvre , Cher , Jura , Saône-et-Loire , Loire , Ain , Haute-Savoie , Savoie , Isère , Haute-Loire , Tarn , Haute-Garonne , Gironde , Charente-Maritime , Charente , Haute - Vienne , Deux-Sèvres , Vendée , Vienne , Indre , Allier , Ariège , Aveyron , Cantal , Corrèze , Creuse , Dordogne , Gers , Ille -et-Vilaine , Landes , Lot , Lot-et-Garonne , Loire-Atlantique , Lozère , Puy-de-Dôme , Bas - Rhin , Haut-Rhin , Paris , Seine-et-Marne , Yvelines , Tarn-et-Garonne , Essonne , Hauts -de-Seine , Seine-St-Denis , Val-de-Marne மற்றும் Val-D'Oise ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 35° இற்கு மேலும் அதிகபட்சமாக 40°C வெப்பமும் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.