Paristamil Navigation Paristamil advert login

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி தெரியுமா ?

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி தெரியுமா ?

29 ஆனி 2025 ஞாயிறு 13:26 | பார்வைகள் : 938


உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதே 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். கழுத்தில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் உருவாகும் இந்த ஹார்மோன் குறைபாடு, இந்தியாவில் பத்து பேரில் ஒருவருக்கு உள்ளது. இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.

தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள், சோயா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், காபி, மதுபானங்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள சில கூறுகள் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கலாம்.

அயோடின் கலந்த உப்பு, மீன், இறால் போன்ற கடல் உணவுகள் (ஒமேகா-3 சத்து), செலினியம் நிறைந்த கோழி, காளான், பூண்டு, பால் பொருட்கள், முட்டை, முழு தானியங்கள் (பழுப்பு அரிசி, ஓட்ஸ்), மெலிந்த புரதங்கள், காய்கறிகள், பெக்டின் நிறைந்த பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்