வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை மந்தனா
29 ஆனி 2025 ஞாயிறு 16:18 | பார்வைகள் : 2184
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஸ்ம்ரிதி மந்தனா படைத்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
இதில் ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) 62 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் குவித்தார்.
ஹர்லீன் தியோல் 23 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 210 ஓட்டங்கள் குவித்தது. லாரென் பெல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 113 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஸ்ரீ சாரணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனா தனது முதல் சர்வதேச டி20 சதத்தினை பதிவு செய்தார்.
இதன்மூலம் மூன்று வடிவ (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan