வெப்பம் : இல்-து-பிரான்சுக்கான வெப்ப எச்சரிக்கை தொடர்கிறது..!

29 ஆனி 2025 ஞாயிறு 17:07 | பார்வைகள் : 2124
கடும் வெப்பம் காரணமாக இன்று நாட்டின் 73 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை ஜூன் 30, திங்கட்கிழமையும் கடுமையான வெப்ப காலநிலை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சுக்குள் உள்ள சகல மாவட்டங்களுக்கும் இன்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை திங்கட்கிழமையும் அதே எச்சரிக்கை தொடர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 37 வெப்பமும், அதிகபட்சமாக 41°C வெப்பமும் பதிவாகும். பரிசில் 36°C வெப்பம் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த வெப்பமான காலநிலை, இவ்வார புதன்கிழமை வரை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1