Paristamil Navigation Paristamil advert login

Solidays திருவிழாவில் திருடனின் பையில் 19 தங்கச்சங்கிலிகள்!!

Solidays திருவிழாவில் திருடனின் பையில் 19 தங்கச்சங்கிலிகள்!!

29 ஆனி 2025 ஞாயிறு 16:51 | பார்வைகள் : 2305


பரிஸ் லோங்சாம்பில் (Paris-Longchamp) நடைபெறுகின்ற Solidays இசை விழாவில், ஒரு திருடன் சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், ஒரு பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது, அவனிடமிருந்து 19 தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வேறு சிலரைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும், பல சங்கிலிகளின் கட்டுக்கள் அறுந்திருந்ததால் பறிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்தாலும்,  வருடாந்தம் 3 நாள் நடைபெறுகின்ற, வண்ணமயமான இசைவிழாவிற்க்கு ரசிகர்கள் ஆர்வமுடன் வருவதைத் தொடர்கிறார்கள். "நான் விழாவுக்கு வரும்போது விலைமிக்க பொருட்களை கொண்டுவர மாட்டேன்; கைபேசியை மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்" என 22 வயதான குளோய் என்ற பரிஸ் பெண் கூறியுள்ளார். 

இசை மற்றும் நல்ல மனநிலைக்கு முக்கியத்துவம் தரும் இளைஞர்கள், பாதுகாப்பாக இருக்கத் திட்டமிட்டபடியே விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்