Paristamil Navigation Paristamil advert login

மெஸ்ஸியின் அணி 0-4 என படுதோல்வி...! உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேற்றம்..

மெஸ்ஸியின் அணி 0-4 என படுதோல்வி...! உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேற்றம்..

30 ஆனி 2025 திங்கள் 11:18 | பார்வைகள் : 716


ஃபிபா கிளப் உலகக்கிண்ண தொடரில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி தோல்வியடைந்து வெளியேறியது.

மெர்சிடிஸ்-பென்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) மற்றும் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (Paris Saint-Germain) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே PSG வீரர் ஜோயாவ் நெவெஸ் கோல் அடித்தார். ப்ரீ கிக்கில் இருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக அவர் மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து 39வது நிமிடத்திலேயே அவரே இரண்டாவது கோலையும் அடித்தார். இதற்கு பதில் கோல் அடிக்க இன்டர் மியாமி அணி போராடியது.

ஆனால் 44வது நிமிடத்தில் தோமஸ் அவில்ஸ் கோல் தடுக்கும் முயற்சியில் Own goal ஆக மாறியது. அதன் பின்னர் 45+3வது நிமிடத்தில் அச்ராஃப் ஹக்கிமி (Acharf Hakimi) அபார கோல் அடித்தார்.

இதன்மூலம் PSG அணியின் கோல் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இரண்டாம் பாதியில் இன்டர் மியாமி ஆதிக்கம் செலுத்தினாலும், PSGயின் தடுப்பை மீறி கோல் அடிக்க முடியவில்லை.

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கோல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. இதனால் PSG அணி 4-0 என்ற கணக்கில் இன்டர் மியாமி அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் படுதோல்வியடைந்த இன்டர் மியாமி தொடரை விட்டு வெளியேறியது. இது மெஸ்ஸியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்