ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!!

30 ஆனி 2025 திங்கள் 15:57 | பார்வைகள் : 1593
பிரான்சில் புது சட்டங்கள், சமூக நலன் மாற்றங்கள், வேலைவாய்ப்பு ஒழுங்குமுறைகள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றன
1.எரிவாயு விலை உயர்வு
➤ இயற்கை எரிவாயுக் கட்டணங்கள் 6.1% உயர்வுடன், சராரியாக 1.4% அதிகரிக்கிறது.
2. புகைபிடிக்கும் இடங்கள் குறைப்பு
➤ பூங்காக்கள், பஸ் நிறுத்தங்கள், பாடசாலை அருகே புகைபிடிக்க தடை.
3. புதிய மருத்துவ விடுப்பு சான்றிதழ் (arrêts-maladies)
➤ புதிய பாதுகாப்புடன் கூடிய "Cerfa" படிவம் கட்டாயம்.
4. வெப்ப அலைக்கு வேலை இடங்களில் புதிய விதிகள்
➤ குளிர்பாதுகாப்பு, அதிக இடைவேளைகள், குளிர்ந்த குடிநீர் வழங்கல் கட்டாயம்.
5. வேலைவாய்ப்பு உதவித்தொகை உயர்வு
➤ 0.5% அதிகரிப்பு, தினசரி குறைந்தபட்சம் 32.13 யூரோக்களாக அதிகரிப்பு
6. d'apprentissage ஒப்பந்தங்களுக்கு €750 கட்டணம்
➤ Bac+3 அல்லது அதற்கு மேல் பயில்வோருக்கான பயிற்சி ஒப்பந்தத்தில் நிறுவனங்கள் செலுத்தவேண்டும்.
7. குழந்தைகளுக்கான la myopie கண்ணாடிக்கு நிவாரணம்
➤ 5 முதல் 16 வயது குழந்தைகளுக்கான Miyosmart கண்ணாடிக்கு சில நிதி ஒதுக்கீடு.
8. மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு
➤ குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு €4,200 வரை உதவி, மற்றவர்களுக்கு €3,100 வரை உதவித்தொகை வழங்கப்படும்.