Paristamil Navigation Paristamil advert login

சிரியா மீதான தடைகள் நீக்கம் தொடர்பில் ட்ரம்ப் உத்தரவு

சிரியா மீதான தடைகள் நீக்கம் தொடர்பில் ட்ரம்ப் உத்தரவு

1 ஆடி 2025 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 204


சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

“சிரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் திட்டத்தை நிறுத்துவதற்காக” இந்த உத்தரவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டமாஸ்கஸின் இரசாயன ஆயுதத் திட்டம் தொடர்பாக சிரிய அரசாங்க சொத்துக்களை முடக்கி, சிரியாவிற்கு ஏற்றுமதி செய்வதை மட்டுப்படுத்திய 2004 அறிவிப்பை இரத்துச் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

புனரமைப்பு மற்றும் இயற்கை எரிவாயு மேம்பாட்டிற்கான நிதியை இலக்காகக் கொண்ட 2019ம் ஆண்டின் சீசர் சிரியா சிவில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் மூலம் விதிக்கப்பட்ட சில தடைகள், அத்துடன் சிரியாவை தீவிரவாதத்தின் ஆதரவாளராக அமெரிக்கா அறிவித்தது ஆகியவை சிரியா மீது விதிக்கப்பட்ட சில தடைகளாகும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்