Paristamil Navigation Paristamil advert login

கவின் - நயன்தாரா படத்தின் தலைப்பு இதுவா?

கவின் - நயன்தாரா படத்தின் தலைப்பு  இதுவா?

1 ஆடி 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 185


நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் விஷ்ணு எடாவன் இயக்கும் இந்தப் படத்தை,  7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித்  தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவிருப்பதாகவும், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், இந்த படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இந்த படத்திற்கு 'ஹாய்'  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே வார்த்தையில் உள்ள இந்த 'ஹாய்' என்ற வார்த்தை, உலகில் உள்ள பலரால் பயன்படுத்தப்படுவதால், மிக எளிதில் ரசிகர்கள் மத்தியில் சென்றடையும் என்றும், தலைப்பே வித்தியாசமாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஜென் மார்ட்டின் இசையில், லியோ பிரிட்டோ ஒளிப்பதிவில், பிருந்தா நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்