வேலை நிறுத்தம்! - விமான சேவைகள் பாதிப்பு!!

1 ஆடி 2025 செவ்வாய் 20:02 | பார்வைகள் : 415
விமான கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, நாளை மறுநாள் வியாழக்கிழமை விமான சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான கட்டுப்பாட்டாளர்கள் இந்த கோடை காலத்தில் பல்வேறு கட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதில் ஒரு கட்டமாகவே இந்த வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. USAC-CGT தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சாள்-து-கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்க அளவு விமான சேவைகள் பாதிக்கப்பட உள்ளதாக பிரெஞ்சு சிவில் விமான போக்குவரத்து பொதுச் சபை (Direction générale de l'Aviation civile) அறிவித்துள்ளது.
அத்தோடு நீஸ், Bastia போன்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் சேவை தடைப்பட உள்ளன.