அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை! - தோல்வி!!

1 ஆடி 2025 செவ்வாய் 21:32 | பார்வைகள் : 345
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம், இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
சோசலிச கட்சி இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்திருந்தது. பிரதமரின் ஆட்சியைக் கவிழ்க்க 289 வாக்குகள் தேவை என இருந்த நிலையில், 189 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இதனால் பிரேரணை வெற்றியளிக்கவில்லை.
இந்த வாக்கெடுப்பில் மரீன் லு பென் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. Nouveau front populaire கூட்டணியைச் சேர்ந்த எவரும் வாக்களிக்கவில்லை. தனிசே சோசலிச கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர்.
இதே மக்ரோனின் ஆட்சியின் கீழ் முன்னதாக மிஷல் பார்னியே அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.