மனநல பாதுகாப்புக்காக குழந்தைகளுக்கு ஸ்கிரீன் தடை!

1 ஆடி 2025 செவ்வாய் 21:47 | பார்வைகள் : 819
2024 ஜூலை 3ம் தேதி முதல், மூன்று வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு திரை (ஸ்கிரீன்) பார்த்தல் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் (microcrèches, crèches, haltes-garderies) தடை செய்யப்படுகிறது.
சுகாதார அமைச்சர் கதிரின் வோட்ரின் இந்த உத்தரவை கையெழுத்திட்டுள்ளார். சிறிய வயதில் திரைகளைப் பார்ப்பது, மூளையின் வளர்ச்சி, தூக்கம், பார்வை மற்றும் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முந்தைய பரிந்துரைகளை மாற்றி இது ஒரு கட்டாயத் தடையாக அமுலுக்கு வருகிறது.
இது முதல் கட்ட நடவடிக்கையாகும். அமைச்சரின் நோக்கம், வீட்டுக்குள்ளும் இந்தத் தடை விரிவடைய வேண்டும் என்பதாகும், ஆனால் அதற்கு புதிய சட்டம் தேவைப்படும்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் சிறுவர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பை வலியுறுத்தி, சமூக ஊடகங்களுக்கு 15 வயதிற்கு கீழ் தடை செய்யும் சட்டங்களை விரும்புகிறார். இது பெற்றோர்களுக்கும் சமுதாயத்துக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய முயற்சி என அரசு கருதுகிறது.