நம்பிக்கையில்லாத் தீர்மானம் - முழுமையான விபரம்!

1 ஆடி 2025 செவ்வாய் 23:25 | பார்வைகள் : 598
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ மீது சேசாலிசக் கட்சி மற்றும் முழு இடதுசாரி கூட்டமைப்பின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் (அழவழைn னந உநளெரசந), பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டது.
தீர்மானம் வெறும் 189 வாக்குகள் மட்டுமே பெற்றது, நம்பிக்;கையில்லாத் தீர்மானததிற்கு 289 வாக்குகள் தேவைப்படுகிறது.
ஜனவரியில், சோசலிசக் கட்சியான PS (partie socialiste) மற்றும் பய்ரூவிற்கிடையில் புரிந்துணர்வு உடன்பாடு இருந்தது – இதனால் மாநில மற்றும் சமூக பாதுகாப்பு பாதீட்டு ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
ஆனால் ஓய்வூதிய வயது 64 ஆக உயர்த்தும் திட்டத்தில் சரியான விவாதம் இல்லாததால், PS தற்போது பய்ரூ துரோகம் செய்ததாகக் கருதுகிறது.
2023-இல், 49.3 சடடத்தின் கீழ், முன்னாள் பிரதமர் எலிசபெத் போர்ன் நாடாளுமன்ற வாக்களிப்பின்றியே சட்டத்தை நிறைவேற்றினார்.
பய்ரூவுக்கு, தற்போது ஒரு மூன்று மாத நிம்மதி கிடைத்திருந்தாலும், அண்மையில் 40 பில்லியன் யூரோ செலவுத்திட்ட குறைப்பு தேவைப்படுகிறது.
இது வரும் ஒக்டோபர் மற்றும் பாதீட்டுக் காலங்களில் புதிய நம்பிக்கையில்லா தீர்மானங்களை மீண்டும் தலைதூக்கும்
தற்போதைக்கு, RN (Rassemblement National) பய்ரூவை ஆதரிக்கிறது.
ஆனால் ஜோர்டன் பார்டெல்லா (RN தலைவர்) 'இந்த அரசு நீண்ட நாட்கள் உயிர்வாழாது என்பதில் எல்லாரும் ஒப்புக்கொள்கிறோம்'. எனத் தெரிவித்துள்ளமை முரணாக உள்ளது.
வெளிநாட்டுப் பொருள்கள், மின் கட்டண உயர்வு, ஓய்வூதியத் தொகை – பணவீக்கின் அடிப்படையில் மாற்றப்படாமை, மற்றும் வாராந்திர விவாதச் சமநிலை ஆகியவை அனைத்தும் புதிய மோதலுக்கான காரணங்கள்.
LR (Les Républicains) தங்கள் ஆதரவைக் குறைத்துவிட்டனர்.
மக்ரோனியர்கள் (Renaissance) கூட மிக மந்தமாக மட்டுமே ஆதரிக்கின்றனர்.
'இந்த அரசை ஆதரிக்கும் ஒரே பொதுவான நோக்கம் — பிரான்சில் ஒரு அரசு இருக்க வேண்டும் என்பதே. அதைவிடக் கூடியது எதுவும் இல்லை.' என Renaissance கட்சியின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது பய்ரூவுக்கான கடுமையான காலத்திற்குத் துவக்கமாக இருக்கலாம். எதிர்கால அரசியல் நிலைமை மிகத் தொலைநோக்காகவும், அவசரமாகவும் மாறும் அபாயம் உள்ளது.