மனித மிருகங்களாக மாறிய போலீஸ் : தி.மு.க.,-எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ்

2 ஆடி 2025 புதன் 12:29 | பார்வைகள் : 271
கிழக்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
காவல் துறை என்ற பெயரில் மனித மிருகங்களாக மாறி, அஜித்குமாரை கொடூரமாக தாக்கிக் கொன்றிருக்கின்றனர். ஒரு திருட்டு வழக்கை இப்படி தான் விசாரிக்க வேண்டுமா?
மனித உயிர் மீது அக்கறை இல்லாத, குரூர புத்தி உடைய தமிழக காவல் துறையை சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறது அரசு. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை என்ற பெயரில் கழிப்பறையில் வழுக்கி விழுவரா அல்லது தப்பி ஓடினர் என்று சொல்லி, 'என்கவுன்டர்' செய்யப்படுவரா?
சாமானியனுக்கு ஒரு நியாயம்; காவல் துறைக்கு ஒரு நியாயமா?
எப்படி பார்த்தாலும் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி, ஒரு மனித உயிரை எடுத்த இவர்களுக்கு எந்த கட்டத்திலும் மன்னிப்பு கிடைக்கக் கூடாது. கட்சியில் யாரும் தவறு செய்தால், நமக்காக உழைத்த கட்சியினர் என்று பாராமல் கூட, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், காவல் துறை மீது மட்டும் ஏன் இந்த மென்மை போக்கு? இவ்வாறு கூறியுள்ளார்.