Paristamil Navigation Paristamil advert login

தெரு நாய்களை பிடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு: காங்., ராகுல் கடும் எதிர்ப்பு

தெரு நாய்களை பிடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு: காங்., ராகுல் கடும் எதிர்ப்பு

12 ஆவணி 2025 செவ்வாய் 13:53 | பார்வைகள் : 140


தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

டில்லியில் சுற்றும் தெருநாய்களை பிடிப்பதற்கான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, பல்லாண்டுகளாக இருந்து வரும் மனிதாபிமான அடிப்படையிலான, அறிவியல் பின்னணி கொண்ட கொள்கைகளில் இருந்து பின்னோக்கி செல்வதாகும்.

குரலற்ற இந்த ஜீவன்கள், அழிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் அல்ல. மொத்தமாக பிடித்துச் செல்வது, கொடூரமானது, குறுகிய பார்வை கொண்டது; இரக்கமற்றது.பொது பாதுகாப்பும், விலங்குகளின் நலனையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்