உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் எழுச்சி பெறும் இந்தியா: மோகன் பகவத்
12 ஆவணி 2025 செவ்வாய் 16:53 | பார்வைகள் : 793
உலகிற்கு தேவைப்படும் போது எல்லாம் இந்தியா எழுச்சி பெறுகிறது, என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்
ராஜஸ்தான் மாநிலம் சிஹாரில் நடந்த விழா ஒன்றில் மோகன் பகவத் பேசியதாவது: உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் இந்தியா எழுச்சி பெறுகிறது. இதனை நாம் உணர்ந்து வருகிறோம். இந்தியா எழுச்சி பெறுவதுடன், உலகில் தனக்கு என ஒரு இடத்தை உருவாக்கி வருகிறது. உலகில், பெரிய சக்திகள் இருந்தாலும், இந்தியா தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறது.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் ஜனநாயகம் செயல்படாது என்று மக்கள் கணித்திருந்தனர். ஆனால், ஜனநாயகம் செயல்பட்டது. ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்ட போது, மக்கள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க பாடுபட்டனர். இன்று ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, உலகின் பிற நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan