Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் - இஸ்ரேல் விமான நிறுவனம் El Al-க்கு அச்சுறுத்தல்!

பரிஸ் - இஸ்ரேல் விமான நிறுவனம் El Al-க்கு அச்சுறுத்தல்!

13 ஆவணி 2025 புதன் 00:31 | பார்வைகள் : 270


ஓகஸ்ட் 11 திங்களன்று, பாரிசில் உள்ள சார்ல்-து-கோல் (Roissy–CDG) விமான நிலையத்தில் இறங்கிய இஸ்ரேலிய தேசிய விமான சேவையான El Al விமானத்தின் விமானி, வானொலியில் பிரான்ஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாளர் ஒருவரிடமிருந்து “Free Palestine” என்ற என்ற வாசகம் கூறப்பட்டதாக நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த நிகழ்வை டஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

 

பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபாரோ (Philippe Tabarot) X தளத்தில் அளித்த விளக்கத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரி அடையாளம் காணப்பட்டு,தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் உடனடியாக பணியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது வானொலி தொடர்பு விதிகளை மீறும் செயல் எனவும், அவை விமானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், பதிவுகள் (recordings) பரிசீலனையில் குற்றச்செயல் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், மிகக் கடுமையான தண்டனைகள் வழங்க உத்தரவிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரான்சில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட நபர் இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

El Al நிறுவனம் இந்த நடத்தையை “தொழில்முறை அல்லாததும், பொருத்தமற்றதும்” என்று கண்டித்துள்ளது.

பிரான்ஸ் யூத நிறுவனங்களின் பிரதிநிதி கவுன்சில் (Crif), இது அரசியல் நடுநிலையையும், விமான கட்டுப்பாட்டு கோபுரம் இடையேயான பாதுகாப்பு நெறிமுறைகளையும் மீறுவதாகக் கூறியுள்ளது.

இது, கடந்த இரண்டு வாரங்களில் El Al நிறுவனத்தை குறிவைத்து இடம்பெறும் இரண்டாவது சம்பவம் ஆகும். ஓருவாரம் முன்பு, பாரிசில் உள்ள El Al அலுவலகங்கள் யூத விரோத (antisemitic) மற்றும் பாலஸ்தீன் ஆதரவு வாசகங்கள் Genocide Airline” போன்றவை) எழுதப்பட்ட எழுதப்பட்டும் சிவப்பு வண்ணம் பூசியும் சேதப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, El Al நிறுவனம் பாரிசில் நிரந்தர பணியாளர்களை வைத்திருக்காமல், பயணிகள் சேவைகளை பிற விமான சேவை நிறுவனங்கள் மூலம் மாற்றுவதாக அறிவித்ததுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்