Paristamil Navigation Paristamil advert login

செப்டம்பரில் டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி: வரி விதிப்பு பிரச்னைக்கு வருகிறது தீர்வு

செப்டம்பரில் டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி: வரி விதிப்பு பிரச்னைக்கு வருகிறது தீர்வு

13 ஆவணி 2025 புதன் 05:26 | பார்வைகள் : 151


செப்டம்பர் இறுதியில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப், 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரிகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்திய இறக்குமதி பொருட்ககளுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.

வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

இந் நிலையில் நியூயார்க்கில் செப்டம்பரில் ஐநா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் வகையில் பயண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நியூயார்க் கூட்டத்தில் பங்கேற்கும் அதே தருணத்தில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, இருநாடுகள் இடையே வர்த்தகம் தொடர்பாக நிலவும் பிரச்னைகள், வரிகள் விதித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது அனைத்து பிரச்னைகள் குறித்து பொதுவான ஒரு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்