Paristamil Navigation Paristamil advert login

அன்புமணியை சஸ்பெண்ட் செய்ய குழு: தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் கடிதம்

அன்புமணியை சஸ்பெண்ட் செய்ய குழு: தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் கடிதம்

13 ஆவணி 2025 புதன் 12:26 | பார்வைகள் : 177


அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது. அவரை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது '', என தேர்தல் கமிஷனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

நீட்டிப்பு

பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் முற்றியுள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். கடந்த 9 ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. பொதுக்குழுவில் அன்புமணியின் தலைவர் பதவியை மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கட்சியின் பெயரில் தனிப்பட்ட லாபத்துக்காக அன்புமணி செயல்பட்டு வருகிறார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.  அவர் நடத்திய பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது. தன்னைத்தானே தலைவர் என அவர் அறிவித்தது செல்லாது. ராமதாஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றதில் இருந்து அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை.  தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல்  ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது கட்சி விதிகளுக்கு முரணானது.  இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்