நாடு முழுவதும் வெப்ப அலை தொடர்கிறது.. 73 மாவடங்களுக்கு எச்சரிக்கை!!

13 ஆவணி 2025 புதன் 07:17 | பார்வைகள் : 496
இன்று ஓகஸ்ட் 13, புதன்கிழமை நாடு முழுவதும் பலத்த வெப்பம் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. 5 மாவட்டங்களுக்கு அதிகூடிய ‘சிவப்பு’ எச்சரிக்கையும், 68 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Météo France இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட தகவல்களின் படி, Ardèche, Aude, Drôme, Isère மற்றும் Rhône ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 41°C வெப்பம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 68 மாவட்டங்களுக்கு வெப்பம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 35 தொடக்கம் 37°C வரையான வெப்பம் எதிர்பாக்கப்பட்டுள்ளது. இந்த செம்மஞ்சள் எச்சரிக்கையில் இல்-து-பிரான்ஸ் மாகானத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன. அதிகபட்சமாக 35°C வெப்பம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.