Paristamil Navigation Paristamil advert login

Aude மாவட்டத்தை புரட்டிப்போட்ட தீ..! - நபர் தேடப்படுகிறார்...!!

Aude மாவட்டத்தை புரட்டிப்போட்ட தீ..! - நபர் தேடப்படுகிறார்...!!

13 ஆவணி 2025 புதன் 18:54 | பார்வைகள் : 1765


Aude மாவட்டத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ 17,000 ஹெக்டேயர்கள் காட்டை எரிந்து சாம்பல் மேடாக்கியிருந்தது. இந்நிலையில், இந்த காட்டுத்தீயின் பின்னால் 'குற்றச்செயல்கள்' உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Montpellier நகர அரச வழக்கறிஞார் அலுவலகம் இதனை இன்று ஓகஸ்ட் 13 ஆம் திகதி உறுதிப்படுத்தியுள்ளது. 'குற்றச் செயல் பின்னணியில் இத்தீ பரவியதாக் நாம் சந்தேகிக்கிறோம்!" என அவர்கள் தெரிவித்தனர்.

சிகரெட் பட்ஸ் வீசப்பட்டு தீ பரவியிருக்கலாம் எனவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெண் ஒருவர் உயிரிழக்கவும், 9 பேர் காயமடையவும் காரணமாக இருந்த இந்த காட்டுத்தீ பரவலுக்கு காரணமாக இருந்தவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்