ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் - ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

13 ஆவணி 2025 புதன் 19:19 | பார்வைகள் : 1056
அணு ஆயுத திட்டம் தொடர்பில் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.
E3 என அழைக்கப்படும் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக, ஐ.நா. சபைக்கு அனுப்பிய கடிதத்தில், ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடங்காவிட்டால் பழைய தடைகள் மீண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
2025-ல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட தடைகள் மீண்டும் அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, புதிய தடைகள் விதிக்கப்படுமானால். ஈரான் தனது அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலக தயாராக இருப்பதாக, Defa Press ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் ஈரான் 60 சதவீதம் தூய்மையான யுரேனியத்தை ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (IAEA) தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்கள் போர் ஏற்பட்டது. இதனால் பேச்சுவார்த்தைக்கு முடங்கியது.