முகமட் அம்ரா வழக்கு : மொரோக்கோவில் இருந்து மேலும் இருவர் பிரான்சுக்கு..!

13 ஆவணி 2025 புதன் 19:54 | பார்வைகள் : 1834
பிரெஞ்சு சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று, மொரோக்கோவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனான முகமட் அம்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் மொரோக்கோவில் இருந்து பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இன்று ஓகஸ்ட் 13, புதன்கிழமை அவர்கள் அழைத்து வரப்பட்டனர். முகமட் அம்ரா தப்பிச் சென்ற வழக்கில் அவர்கள் தொடர்புடையவர்கள் எனவும், அவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் பிரான்சில் பிறந்தவர்கள் எனவும், ஒருவர் 28 வயதுடைய Alan G. இரண்டாமவர் 38 வயதுடைய Albinou D. எனவும், அவர்கள் Évreux (Eure) நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1