தென் சீன கடலில் அமெரிக்க போர் கப்பல்

14 ஆவணி 2025 வியாழன் 06:14 | பார்வைகள் : 212
தென் சீன கடலில் சீன எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க போர்க் கப்பலை விரட்டியடித்தோம் என சீன ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.
தென் சீன கடல், உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்று. ஆண்டுக்கு 24 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் இந்தப் பகுதி வழியாக நடைபெறுகிறது. தென் சீன கடலின் பெரும் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இங்கு உள்ள ஸ்கார்பரோ ஷோல் என்ற பகுதி, பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு உள்ளே அமைந்துள்ளது. ஆனாலும் சீனா இதை தங்கள் பகுதி என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த பகுதிக்குள் ரோந்து சென்ற அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., ரால்ப் ஜான்சன் போர்க் கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் கூறுகையில், “இந்த நடவடிக்கைகள் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டவை. சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையை எடுத்தோம்,” என்றார்.