சச்சின் மகனுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்? யார் அந்த சானியா சந்தோக்?

14 ஆவணி 2025 வியாழன் 09:40 | பார்வைகள் : 130
சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், தந்தையை போலவே சிறுவயதில் இருந்து கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆல் ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சானியா சந்தோக்(Saaniya Chandhok) என்ற பெண்ணுடன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு குடும்பத்தின் நெருங்கிய நபர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இரு குடும்பங்களும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ரவி காய்(Ravi Ghai) என்பவரின் பேத்தி தான் சானியா சந்தோக் ஆகும்.
விருந்தோம்பல் மற்றும் உணவுத்துறையில் பிரபலமான ரவி காய் குடும்பம், Intercontinental ஹோட்டல் மற்றும் பிரபல ஐஸ்கிரீம் பிராண்ட்டான Brooklyn Cremeary ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.
மேலும், மும்பையை தளமாக கொண்டு செயல்படும் Mr. Paws Pet Spa & Store LLP என்ற செல்லப்பிராணிகளுக்கான ஸ்பாவின் இயக்குநராக சானியா சந்தோக் செயல்படுகிறார்.
இவர் அர்ஜுன் டெண்டுல்கரின் சகோதரி சாரா டெண்டுல்கரின் நெருங்கிய தோழியாக கருதப்படுகிறார். இருவரும் ஒன்றாக இணைந்து ஐபிஎல் போட்டிகளை பார்த்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.