ரஷித் கானின் Golf ஸ்டைல் சிக்ஸர்!

14 ஆவணி 2025 வியாழன் 10:40 | பார்வைகள் : 423
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் The Hundred தொடரில் அடித்த சிக்ஸர் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
எட்ஜ்பாஸ்டனில் நடந்த The Hundred ஆடவர் போட்டியில், பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஓவல் இன்வின்சிபிள் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் ஓவல் அணியில் விளையாடி வரும் ரஷித் கான் (Rashid Khan) 9 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 16 ஓட்டங்கள் விளாசினார்.
ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்று கோல்ப் அடிக்கும் ஸ்டைலில் ரஷித் கான் மிரட்டலாக சிக்ஸர் அடித்தார்.
இது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.