மருந்தக ஊழியர்கள் பெரும் போராட்டம் – ஓகஸ்ட் 16 பணிப்புறக்கணிப்பு!
14 ஆவணி 2025 வியாழன் 11:06 | பார்வைகள் : 6837
அரசு மருந்தகங்களுக்கு வழங்கப்படும் காப்புரிமை அகற்றப்பட்ட ஜெனரிக் (Generic) மருந்துகளின் வணிக தள்ளுபடிகளை குறைக்கும் உத்தரவினால் சில மாகாணங்களில் ஓகஸ்ட் 16, சனிக்கிழமை, மருந்தகங்களில் 90% வரை மூடப்படும் என்று மருந்தகங்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பிரான்ஸ் அரசு 2025 சுகாதாரச் செலவில் 1.7 பில்லியன் யூரோ குறைப்பை இலக்காக வைத்துள்ளது. இதில் 500 மில்லியன் யூரோ மருந்துத் துறையிலிருந்து குறைக்க உள்ளனர்.
இதுவரை ஜெனரிக் மருந்துகளில் உற்பத்தியாளர்கள் மருந்தகங்களுக்கு 40% வரை தள்ளுபடி அளித்து வந்தனர்.
செப்டம்பர் 1 முதலான புதிய உத்தரவுப்படி தள்ளுபடி உச்சவரம்பு 30% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
2027ல் இது 20% ஆகக் குறையும்.
FSPF (Fédération des pharmaciens d'officine) உள்ளிட்ட பல மருந்தக அமைப்புகள், ஆகஸ்ட் 6ல் வெளியான உத்தரவை “துரோகம்” எனக் கூறி, போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளன.
செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றம் முன் போராட்டம்.
ஓகஸ்ட் 16, செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 27 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் மருந்தக மூடல்.
USPO (Union des syndicats de pharmaciens d’officine) அரசு மீது இரட்டை சட்ட வழக்கு தொடங்க திட்டமிட்டுள்ளது:
அரசியல் நீதிமன்றத்தில் (Conseil Constitutionnel) – அரசியலமைப்பு தொடர்பான கேள்வி (QPC).
நிர்வாக நீதிமன்றத்தில் – சுகாதார சேவையை அணுக முடியாத நிலைமை தொடர்பான வழக்கு.
“24 மணி நேரமும், 7 நாட்களும் மக்கள் சேவையில் இருக்கும் எங்கள் தொழில், ஒருமுறை கூட அங்கீகாரம் பெற முடியாதா? ஏன் எப்போதும் சமூக பாதுகாப்புத் துறையின் கணக்கில் ‘செலவு குறைக்கும் கருவி’ போலவே நாங்கள் பார்க்கப்பட வேண்டும்?"என FSPF தலைவர் பிலிப் பெஸ்ஸெட் (Philippe Besset) காட்டமாகத் தெரிவித்துள்ளார்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan