AI மூலம் செல்போனில் பேசுவதை ஒட்டுக்கேட்க முடியும் - தனியுரிமைக்கு அச்சுறுத்தல்
14 ஆவணி 2025 வியாழன் 10:40 | பார்வைகள் : 1234
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சந்தேக நபர்களின் செல்போன் உரையாடல்களை ஒட்டுகேட்க, அரசாங்கம் பல்வேறு சாதனம் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்களை இந்திய அரசு ஒட்டுக்கேட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், AI உதவியுடன் தொலைபேசியில் பேசும் அதிர்வுகளை வைத்து என்ன பேசுகிறோம் என்பதை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார், மோஷன் சென்சார் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் millimeter wave radar sensor இதில் பயன்படுத்தப்படுகிறது.
இதனை பயன்படுத்தி, தொலைபேசியின் Ear Piece ல் இருந்து வரும் சிறிய அதிர்வுகளை படம்பிடித்து, அதை AI உதவியுடன் பகுப்பாய்வு செய்து, உரையாக மாற்ற முடியும்.
ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில், செல்போனில் இருந்து 10 அடி தூரத்தில் இந்த ரேடாரை பயன்படுத்தி அதிர்வுகளை படம்பிடித்துள்ளனர்.
அதனை, AI உதவியுடன் உரையாடலாக மாற்றியதில் 10,000 வார்த்தைகளில் சுமார் 60 சதவீதத்தை துல்லியமாக வழங்கியுள்ளது.
100 சதவீத துல்லியம் இல்லை என்றாலும், இதன் மூலம் என்ன பேசப்படுகிறது என்பதை ஓரளவு யூகிக்க முடியும். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மூலம், எதிர்காலத்தில் இதன் துல்லியத்தன்மை 100 சதவீதத்தை எட்ட கூடும் என கூறப்படுகிறது.
உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை கணிக்கும் லிப் ரீடிங் போல் இது செயல்படுவதாக ஆராய்ச்சியாளர் Suryoday Basak தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இது தனியுரிமைக்கு வரும் அச்சுறுத்தலான ஒன்றாகவே கருதப்படுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆய்வின் குறிக்கோள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan