14 மாவட்டங்களுக்கு வெப்பஅலை மஞ்சள் எச்சரிக்கை !

14 ஆவணி 2025 வியாழன் 12:06 | பார்வைகள் : 228
இன்று வியாழக்கிழமை 14ம் திகதி பிரான்ஸ் மேற்குப் பகுதியின் 14 மாவட்டங்கள் இன்று வெப்பஅலை மஞ்சள் எச்சரிக்கை ("Vigilance jaune – canicule") பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று Météo-France அறிவித்துள்ளது.
மாவட்டங்கள் :
Eure-et-Loir, Ille-et-Vilaine, Indre-et-Loire, Loir-et-Cher, Loire-Atlantique, Maine-et-Loire, Mayenne, Morbihan, Pas-de-Calais, Pyrénées-Atlantiques, Sarthe, Deux-Sèvres, Somme, Vienne.
ஓகஸ்ட் 8 முதல் பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது.
இது 1947க்குப் பிறகு பதிவான 51வது வெப்பஅலை.
வியாழக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் வெப்பம் சற்று குறையலாம், ஆனால் தென்மேற்கு மற்றும் Occitanie பகுதிகளில் 35°C முதல் 38°C வரை இருக்கும்.
தற்போது 75 மாகாணங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கை ("Vigilance orange") பட்டியலில் உள்ளன.