எங்கள் குடியிருப்புகளில் வெப்பத்தால் மூச்சுத் திணறுகிறோம்!!

14 ஆவணி 2025 வியாழன் 13:06 | பார்வைகள் : 382
லியோன் (Lyon-Rhône)) இந்நாளில் கடும் வெப்ப செம்மஞ்சள் எச்சரிக்கை நிலைக்குள் இருந்த நிலையில், வெப்பத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக நகராட்சி பூங்காக்களை இரவிலும் திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது.
முந்தைய நாட்களில் லியோன், அதிகபட்ச கடும் வெப்ப சிவப்புஎச்சரிக்கை கீழ் இருந்தது. அதனடிப்படையில், நகராட்சி குளிர்ச்சி குறிக்கோள்(Objectif fraîcheur) திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
7ஆம் வட்டாரத்தில் உள்ள பிளான்டான் பூங்கா (Parc Blandan) வழக்கத்தை விட தாமதமாக திறந்திருக்கும், மேலும் விருப்பமுள்ளவர்கள் இரவெல்லாம் அங்கே தங்கியும் குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம்.
"அங்கு கழிப்பறை வசதி, தண்ணீர் ஊற்றுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. மக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்," என 7ஆம் வட்டார நகரபிதா ஃபானி டுபோட் (Fanny Dubot) கூறினார்.
"வெப்பநிவாரணி (ventilateur) முன்னால் 9 மணி நேரம் உட்கார்வதை விட, நட்சத்திரங்களைப் பார்த்து, இசை கேட்டு ஒரு வேறு அனுபவத்தை பெறலாம்," என்று ஒரு இளைஞர் தன் மேற்பாயுடன் கூறினார்.
"எங்கள் குடியிருப்புகளில் வெப்பத்தால் மூச்சுத் திணறுகிறோம். இப்படி குளிர்ந்த இடங்கள் கிடைப்பது அருமை. இந்த அனுபவத்தை முயற்சித்து, வரும் நாட்களிலும் வர முடியுமா என்று பார்க்கிறேன்," என்று மற்றொரு இளம் பெண் தெரிவித்தார்.
Blandan,பூங்காவைத் தவிர, பிற பசுமை இடங்களின் நேரங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள், கடும் வெப்ப எச்சரிக்கை முடியும் வரை தொடரும் என்று நகராட்சி அறிவித்துள்ளது.