இத்தாலியில் அகதிகள் படகு விபத்து - 26 பேர் பலி

14 ஆவணி 2025 வியாழன் 11:40 | பார்வைகள் : 467
இத்தாலியின், லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது. லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர்.
ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர். ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலிய கடற்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேவேளை இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1