Paristamil Navigation Paristamil advert login

கரும்புச் சர்க்கரை ஆரோக்கியமானதா?

கரும்புச் சர்க்கரை ஆரோக்கியமானதா?

14 ஆவணி 2025 வியாழன் 23:41 | பார்வைகள் : 472


ஆரோக்கியமான உணவு குறித்து சிந்திக்கத் தொடங்கும் போது நாம் முதலில் விட்டுவிடும் பொருள் சர்க்கரை. ஆனால், கடைசியாக மனதில் இருந்து நீங்கும் ஆசையும் அதுவே. சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ட்ரூத் சோசியல் தளத்தில், “கோகோ கோலா நிறுவனம், அமெரிக்க சந்தைக்கான பானங்களில் சோளச் சிரப்பிற்கு பதிலாக கரும்புச் சர்க்கரையைப் பயன்படுத்தும்” என்று அறிவித்தார். பின்னர், நிறுவனமும் இதை உறுதிப்படுத்தியது. ஆனால், உண்மையில் இது ஆரோக்கியத்திறான மேம்படுத்தலா? என்பது தான் பலரின் கேள்வியாகும்.

கரும்புச் சர்க்கரையானது, கரும்பிலிருந்து நேரடியாக பெறப்படும் இயற்கையான இனிப்பைக் கொண்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையுடன் ஒப்பிடும் போது, இது சில மொலாசஸ் தன்மைகளை தக்க வைத்துக்கொள்வதால் சிறிய கேரமேல் சுவையை தருகிறது.  ஆனால், ஆரோக்கியம் என்ற கேள்விக்கு பெரும்பாலும் பதில் இல்லை.

“கரும்புச் சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவது வீக்கம், இதய நோய், நீரிழிவு, சில புற்றுநோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது. இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை வேகமாக உயர்த்தும் தன்மையே இதற்குக் காரணம். அடிப்படையில், இது மற்ற பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளைப் போலவே செயல்படுகிறது.” என்கிறார்.

உலக சுகாதார அமைப்பு (WHO) வழிகாட்டுதலின்படி, சேர்க்கப்படும் சர்க்கரை தினசரி கலோரிகளில்  10% -க்கும் குறைவாக இருக்க வேண்டும், சிறந்த ஆரோக்கியத்திற்காக 5%-க்கும் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். இது, நீரிழிவு இல்லாத ஒருவருக்கு தினமும் அதிகப்பட்சம் 4-5 டீஸ்பூன் கரும்புச் சர்க்கரை என்கிற அளவாகும்.கரும்புச் சர்க்கரையில் மிகக் குறைவான தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளன. இது விரைவாக இரத்த சர்க்கரையை உயர்த்துவதால், கொழுப்பு கல்லீரல், உடல் பருமன், பற்கள் சேதம், இதய நோய் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

* சுத்திகரிக்கப்பட்ட கரும்புச் சர்க்கரை என்பது வெள்ளைச் சர்க்கரை போலவே, பெரும்பாலும் சுக்ரோஸ் மட்டுமே நிறைந்தது.
* சுத்திகரிக்கப்படாத / பச்சை கரும்புச் சர்க்கரையில் (வெல்லம், கான்ட்) இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறிதளவு இருக்கும். ஆனால், அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மிகக் குறைவு, அதிகமாக எடுத்தால் பாதிப்பு தொடரும்.

கரும்புச் சர்க்கரை, மாரத்தான் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற தீவிர உடற்பயிற்சியின் போது உடனடி ஆற்றல் வழங்குவதில் முகு்கிய பங்கு வகிக்கலாம். எனவே, சில விளையாட்டு வீரர்கள் இதை அதிக பிரக்டோஸ் காரணமாக சோளச் சிரப்பிற்கு மாற்றாகப் பயன்படுத்துவர். ஆனால், தினசரி வாழ்க்கையில் இதை ஒரு உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மிதமான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்படாத கரும்புச் சர்க்கரை, சோளச் சிரப்பை விடச் சிறிதளவு மேம்பட்டது. எனினும், அது இன்னும் சர்க்கரை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினசரி இனிப்பை விரும்புபவர்கள், பேரீச்சம் பழம், தேன் போன்ற இயற்கையான விருப்பங்களுக்கு (மிதமாகவே!) மாறலாம். பேரிச்சம் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை, நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உடலுக்கு அதிக நன்மை தரும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்