தீபாவளியன்று மக்களுக்கு மிகப்பெரிய பரிசு: பிரதமர் மோடி அறிவிப்பு

15 ஆவணி 2025 வெள்ளி 10:16 | பார்வைகள் : 149
நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். அதற்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பால் ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் நிதி நிலைமை மேம்படும்.
ரூ.15 ஆயிரம்
இளைஞர்களுக்காக ரூ.1லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்படும். புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 3.5 கோடி இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும். புதிதாக தனியார் துறையில் பணியில் இணையும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சமரசம் இல்லை
உற்பத்தியில் உலக அளவில் விவசாயிகள் சாதனை புரிந்து வருகின்றனர். மீனவர்கள், விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை. பருப்பு உற்பத்தியில் முதல் இடம். அரிசி, கோதுமை உற்பத்தியில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. இப்பொழுது அரசும், திட்டங்களும் மக்களின் வீடு தேடி வருகிறது. பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்தியாவில் 25 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டு உள்ளது.
உடல் பருமன்
நாட்டில் 3ல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள உடல் பருமன் கவலை அளிக்கிறது. மொழிகள் குறித்து பெருமை கொள்ள வேண்டும். மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி. தேச சேவையில் 100 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் நிறைவு செய்துள்ளது. தேசத்திற்கான உயிர் தியாகங்களை ஆர்எஸ்எஸ் செய்துள்ளது.
அனுமதிக்காது
ககன்யான் திட்டத்தில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நமது நாட்டின் தலைவிதியை மாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும். இளைஞர்களிடம் நான் வேண்டுக்கோள் விடுக்கிறேன். தேசிய மாற்றத்திற்கான இந்த நோக்கத்திற்கு முன்னோக்கி செல்ல நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும். பழங்குடியினரின் நிலத்தை ஊடுருவல்காரர்கள் அபகரிக்க இந்தியா அனுமதிக்காது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.