Paristamil Navigation Paristamil advert login

ப்ரேவிஸை வாங்க CSK அணி விதிமீறலில் ஈடுபட்டதா? அஸ்வின் சொன்ன அதிர்ச்சி தகவல்

ப்ரேவிஸை வாங்க CSK அணி விதிமீறலில் ஈடுபட்டதா? அஸ்வின் சொன்ன அதிர்ச்சி தகவல்

15 ஆவணி 2025 வெள்ளி 10:27 | பார்வைகள் : 113


2025 ஐபிஎல் தொடரில், 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல்முறையாக புள்ளிபட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.

 

முதல் 11 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது. கடைசி 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.

 

ஆரம்ப கட்ட போட்டிகளில், சென்னை அணியின் துடுப்பாட்டம் மோசமான ஒன்றாக இருந்தது.

 

அதன் பின்னர் சில வீரர்கள் காயம் அடைந்த நிலையில், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகிய இளம் வீரர்கள் அணியில் இணைக்கப்பட்ட பின்னர் அணியின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தது.

 

இதில், வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த டெவால்ட் பிரேவிஸ் அணியில் இணைக்கப்பட்டார்.

 

CSK அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய பிரேவிஸ், 37.50 துடுப்பாட்ட சராசரி மற்றும் 180 ஸ்ட்ரைக் ரேட் உடன் 225 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

 

CSK அணி வெற்றி பெற்ற கடைசி 2 போட்டிகளிலும், பிரேவிஸ் அரைசதம் விளாசி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

 

இந்நிலையில், பிரேவிஸ் CSK அணியில் வாங்கப்பட்டது குறித்து அந்த அணியின் மூத்த வீரர் அஸ்வின் பேசிய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

யூடியூப் சேனலில் இது குறித்து பேசிய அஸ்வின், "பிரேவிஸை ஒப்பந்தம் செய்ய 2-3 அணிகள் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்த அணிகள் கூடுதல் பணம் வழங்க முன்வராததால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது.

 

அவர் மாற்று வீரர் என்பதால் அடிப்படை விலையில் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருந்தது. என்ன நடக்கும் என்றல், வீரர்கள் தங்களது ஏஜென்டிடம் பேசுமாறு கூறுவார்கள். கூடுதல் விலை கொடுத்தால் அணியில் இணைகிறேன் தெரிவிப்பார்கள்.

 

அடுத்த ஐபிஎல் ஏலத்தில் நல்ல விலைக்கு வாங்கப்படுவோம் என வீரர்களுக்கு தெரியும். இப்போது நல்ல விலையை கொடுக்க வில்லையென்றால் அடுத்த ஏலத்தில் அதிக விலைக்கு செல்வேன் என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது.

 

அவர் கேட்ட தொகையை வழங்க CSK தயாராக இருந்தது. இப்போது அணியின் துடுப்பாட்டத்திற்கு அவர் மகுடமாக உள்ளார்" என தெரிவித்துள்ளார்.

 

ஐபிஎல் விதிகளின் படி, மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்படுவரின் விலை, காயமடைந்த வீரரின் தொகையை விட அதிகமாக இருக்க கூடாது.

 

குர்ஜப்னீத் சிங் 2.2 கோடிக்கு CSK அணியால் வாங்கப்பட்டார். பிரேவிஸின் அடிப்படை விலை ரூ.75 லட்சம் ஆகும்.

 

அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட பிரேவிஸ்க்கு ரூ.2.2 கோடிக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டதாக CSK அணி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும், கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளதா என அஸ்வினின் இந்த பேச்சுக்கு பின்னர் பலரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்