BE 6 Batman Edition காரை வெளியிட்ட Mahindra

16 ஆவணி 2025 சனி 13:08 | பார்வைகள் : 132
மஹிந்திரா நிறுவனம் அதன் BE 6 எலக்ட்ரிக் காரின் Batman Edition-ஐ வெளியிட்டுள்ளது.
Mahindra & Mahindra நிறுவனம் Warner Bros நிறுவனத்துடன் இணைந்து, அதன் BE 6 Electric SUV காரின் limited edition Batman variant-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எலக்ட்ரிக் கார் ரூ.27.79 லட்சம் (Ex-Showroom) என விலை நிரநயிக்கப்பட்டுள்ளது. சார்ஜர் மற்றும் installation செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.
BE 6 Batman special Edition மொத்தம் 300 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படவுள்ளன.
இந்த காருக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் 23-ம் திகதி தொடங்குகிறது. அதன் விநியோகம் சர்வதேச பேட்மேன் தினமாக கொண்டாடப்படும் செப்டம்பர் 20 முதல் ஆரம்பமாகிறது.
BE 6 தான் மஹிந்திரா நிறுவனம் முழுமையாக மின்சார காராக வடிவமைத்த முதல் மொடல் ஆகும். அதற்கு முன் வந்த மொடல்கள் பெட்ரோல் கார்களை மின்சார கார்களாக மாற்றப்பட்டவை.
BE 6 Batman Edition முக்கிய அம்சங்கள்
Satin Black நிறம்
முன் கதவுகளில் பேட்மேன் படம்
R20 அலாய் வீல்கள்
akchemy Gold-Painted Suspension
காரின் உள்ளேயும் வெளியேவும் பல இடங்களில் பேட்மேன் சின்னம்
Mahindra & Mahindra நிறுவனம் தற்போது இந்தியாவில் மூன்றாவது பாரிய மின்சார வாகன தயாரிப்பாளராக உள்ளது - மாதம் சுமார் 3000 கார்கள் விற்பனையாகின்றன.