உக்ரைனுக்கு ஆதரவை தொடர வலியுறுத்தும் மக்ரோன் : ரஷ்யாவுக்கு அழுத்தம் தேவை!!

16 ஆவணி 2025 சனி 14:23 | பார்வைகள் : 366
உக்ரைனுக்கு நிலையான அமைதி கிடைக்கும் வரை ரஷ்யாவுக்கு எதிராக அழுத்தத்தை தொடர வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மற்றும் புடின் இடையிலான அலாஸ்கா உச்சி மாநாட்டுக்குப் பிறகு வெளியிட்ட செய்தியில், கடந்த 30 ஆண்டுகளில் ரஷ்யா தன் ஒப்பந்தங்களை மீறிய வரலாறு இருப்பதாகவும், கீவுக்கு தொடர்ச்சியான ஆதரவு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலையான அமைதிக்காக உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது என மக்ரோன் கூறியுள்ளார். அமெரிக்கா அதற்காக தயாராக இருப்பதை அவர் வரவேற்கின்றார். ஐரோப்பிய தலைவர்களும் ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய புதிய தண்டனைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.